100யூனிட் இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பள்ளிகளில் காலை உணவு, என புதுச்சேரி பட்ஜெட் முழு விவரம்
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி, 2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கான, ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காத நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியது. 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்த நிலையில், அவர் வராததால் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநர் உரை நிறுத்தி வைப்பதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறி சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.
பின்னர், சட்டப்பேரவையில் திட்டமிட்டபடி மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்
- புதுச்சேரியில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்
- இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.
- போன் செய்தால் வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும்.
- மாடித்தோட்டத்திற்கு 75% மானியம்.
- புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் துவங்கப்படும்
- புதுச்சேரி உள்ள அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15-ஆம் தேதி அமல்படுத்தப்படும்
- அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவசமாக லேப்டாப் தரப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் நாராயணசாமியின் இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்