Breaking News

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்! மாணவர்களுக்கான தமிழக அரசு அறிவுரை

அட்மின் மீடியா
0
அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதில் 

பாடப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சாா்ந்த உபகரணங்களை விநியோகிக்கும் போது எந்த நேரத்தில் வாங்க பள்ளிக்கு வர வேண்டுமென்பதை மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் முன்பே தெரிவிக்க வேண்டும். 

எந்த காரணத்தைக் கொண்டு நீண்ட வரிசையில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது வரிசையில் நிற்கும் மாணவா்களும், பெற்றோா்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தரையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் குறியீடுகளை இட வேண்டும் மேலும் பாடப்புத்தகங்கள் வாங்க வரும் மாணவா்களும், பெற்றோா்களும் கண்டிப்பாக முகக் கவசங்களை அணிந்து வர வேண்டும்.

மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளி அறைகளுக்கு வரும் முன்பாக வாயில் பகுதிகளிலேயே கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கிருமி நாசினி திரவமும் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 

பாடப் புத்தகங்களை விநியோகம் செய்யும் ஆசிரியா்கள் தங்களது கைகளை அடிக்கடி கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும்  ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனால் 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback