Breaking News

FACT CHECK: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரப்பபடும் புகைப்படங்கள் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அயோத்தியில்  ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை?அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று சில படங்களை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அயோத்தியில்  ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பல இடங்கலில் எடுக்கபட்ட புகைபடஙக்ளை தொகுத்து அயோத்தில் கிடைத்தது என ஷேர் செய்கின்றார்கள்
 
முதல் படம்

பலரும் ஷேர் செய்யும் இந்த புத்தர் படம் பீகார் மாநிலம் நலந்தாவில் நடத்தப்பட்ட அகழாய்வில் 2016 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது 


அட்மின் மீடியா ஆதாரம் 


இரண்டாவது படம்

குகைக்குள் புத்தர் தலைமட்டும் தெரியும்பலரும் ஷேர் செய்யும் இந்த புகைப்படம்  ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள  அய்நாக்  என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக 2015ல் கண்டு பிடிக்கபட்டது






அட்மின் மீடியா ஆதாரம் 



மூன்றாவது படம்

இந்த புத்தர் புகைப்படம் மியான்மரில் கண்டெடுக்கப்பட்டது



அட்மின் மீடியா ஆதாரம் 



நான்காவது படம்

பலரும் ஷேர் செய்யும் இந்த புகைப்படம் பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டது


அட்மின் மீடியா ஆதாரம் 



உலகில் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கபட்ட புத்தர் சிலைகளின் புகைபடங்களை தொகுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் போது கிடைத்தது என பொய்யாக பரப்பபடுகின்றது

எனவெ யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK

Give Us Your Feedback