Breaking News

FACT CHECK: வெள்ளை மாளிகை தாக்கபட்டதா வெள்ளை மாளிகையின் உள்ளே நுழைந்தார்களா போராட்டகாரர்கள் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அமெரிக்க வெள்ளை மாளிகையினை முற்றுகையிட்ட போரட்டகாரர்கள் வெள்ளை மாளிகையினை தாக்கி உள்ளே புகுந்தார்கள் என்று ஒரு செய்தியினையும் ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


 பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள கட்டிடம் வெள்ளை மாளிகை இல்லை

அந்த கட்டிடத்தின் பெயர் Ohio Statehouse என்பதாகும் அந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை


அமெரிக்க வெள்ளை மாளிகை புகைப்படம் கீழ் உள்ளது



பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள கட்டிடத்தையும் வெள்ளை மாளிகை புகைபடத்தையும் பாருங்கள் வித்தியாசம் தெரியும்

வடிவேல் பானியில் சொல்லனும் என்றால் மண்டையில் உள்ள கொண்டையை மறைக்கவில்லை என்பது போல்



வெள்ளைமாளிகையில் கட்டிடத்தின் மேல் உள்ள டூம் இல்லை

பார்பதற்க்கு வெள்ளை மாளிகை போல் இருந்தாலும் அந்த கட்டிடம் வெள்ளை மாளிகை இல்லை என்பதே உண்மை

மேலும் இது போல் சர்வசாதாரணமாக வெள்ளை மாளிகையில் சென்று அது போல் கலவரம் செய்ய முடியமா? சிந்திக்க வேண்டும் மக்களே

மேலும் அமெரிக்காவில் உள்ள Ohio Statehouse தாக்கபட்டதை மீடியாக்களும் செய்தி வெளியிட்டுள்ளன

மேலும் அமெரிக்கவெள்ளைமாளிகையின் கூகுள்வியூவும் Ohio Statehouse கூகுள் வியூவும் கீழே உள்ளது பார்த்து தெளிவு படுத்தி கொள்ளுங்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Ohio Statehouse கூகுள் வியூ


அட்மின் மீடியாவின் ஆதாரம்
வெள்ளை மாளிகையின் கூகுள் வியூ


அட்மின் மீடியாவின் ஆதாரம்

Ohio Statehouseதாக்கபட்ட செய்தியினை வெளியிட்ட மீடியா



அட்மின் மீடியாவின் ஆதாரம்
Ohio Statehouse பற்றி விக்கி பீடியா


Tags: FACT CHECK மறுப்பு செய்தி முக்கிய செய்தி

Give Us Your Feedback