FACT CHECK: கபர் குழியில் ரோஜா பூ : வீடியோ பற்றி தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இறந்தவரை அடக்க கபர் குழி தோண்டியபோது, பக்கத்து கபரை காணுங்கள். பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யா அல்லாஹ் நான் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. எனது கபரை அலங்கரிப்பாயாக. விஷச்சந்துகளிலிருந்து காப்பாயாக. ஆமீன். என்று ஒரு பதிவுடன் ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
இதைப்பற்றிய முடிவை வாசகர்களாகிய உங்களிடமே ஒப்படைக்கிறோம்.
இந்த சம்பவம் எங்கே நடந்தது எப்போது நடந்தது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை ஆனால் அதிலிருந்து சில படிப்பினைகளை தெரிந்து கொள்வோம்.
இந்த வீடியோ 2019 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் பொதுவாக பார்ப்போம் அதாவது அதில் உள்ள ரோஜா பூக்கள் புதியதாக இருக்கிறது அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஒரு சில பேர் மட்டுமே இருக்கிறார்கள் ஆனால் பெருமளவு மக்கள் அங்கு இல்லாததிற்க்கு காரணம் என்னவென்று நமக்கு தெரியவில்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரல் ஆவதற்க்கு காரணம் தெரியவில்லை ஆனால் இது மார்க்கத்தீர்க்கு ஏற்புடையதா என்பதை பார்ப்போம்
ஒரு மனிதன் இறப்பதற்கு முன் நல்ல காரியங்களை அதிகமாக செய்திருந்தால் அவனுடைய மண்ணரை என்பது சொர்க்கத்தின் பூஞ்சோலையாக இருக்கும், அவனுடைய தீய காரியங்கள் அதிகமாக இருந்தால் அவனுடைய மண்ணரை நரகத்தின் படுகுழியாக இருக்கும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை சம்பந்தப்பட்டது.
எனவே இதுபோன்ற வீடியோக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்வது நல்ல காரியங்களை அதிகமாக செய்தால் நம்முடைய மண்ணரை விசாலமாகவும் நல்ல நிலையிலும் இருக்கும் ஆனால் பாவங்கள் அதிகமாக செய்தால் நம்முடைய மண்ணரை தண்டனைக்குரிய இடமாக இருக்கும்.
எனவே வாழும் காலங்களில் நல்ல காரியங்களை அதிகம் செய்து நம்முடைய மண்ணறையை ஒளிமயமாக ஆக்கிக்கொள்வோம்.
Tags: FACT CHECK தமிழக செய்திகள்