Breaking News

FACT CHECK: 9266600223 இந்த நம்பரில் இருந்து கால் வந்தால் எடுக்காதீங்க: அனைவருக்கும் ஷேர் செய்யுங்க: என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அமித்ஷா டவுன் மோடி  இந்த நம்பரில் இருந்து வீடியோகால் வந்தால் எடுக்காதீங்க  என்று  ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


முதலில் நாம் நம்க்கு ஒரு செய்தி வந்தால் அந்த செய்தி உண்மையா பொய்யா என சரி பார்பது கிடையாது , வந்த உடனே ஷேர் செய்து விடுகின்றோம், அந்த செய்தி பொய்யாக இருந்தாலும் அதைபற்றி கவலை கொள்வது இல்லை

சரி சில செய்திகளை நீங்களே சரி பார்க்கலாம் உதாரணத்திற்க்கு போன் நம்பர் போட்டு வரும் செய்திகளை ஒரு போன் போடு பார்த்தால் அந்த செய்தி உண்மையா பொய்யா என தெரிந்து விடும்,   ஆனால் அதனை கூட செய்வது இல்லை

சரி விஷயத்திற்க்கு வருவோம்  மேலே சொன்னது போல் ஒரு போன் செய்து பார்த்து உண்மையா பொய்யா என்று தெர்ந்து கொள்ளாமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நல்லவர்களே இந்த செய்தி பொய்யான ஒன்று

இந்த செய்தி கடந்த 3 ஆண்டுகளாக சமூகவலைதளங்கலில் வலம் வருகின்றது
மேலும் ஒரு கூடுதல் தகவல் என்ன வென்றால் இந்த நம்பர் ஆக்டிவ்லேயே இல்லை

இந்த நம்பரை கொண்டு இணையத்தில ஏதாவது செய்தி தேடினால் இந்த நம்பரை கொண்டு பல கதைகள் வலம் வருகின்றன

இதே மெசஜ் சோனியா பெயரிலும், கிரிடிட் கார்டு மோசடி என்ற பெயரிலும், தற்போது அமித்ஷா பெயரிலும் என  பல மெசஜ்கள்  இனையம் முழுவதும் கொட்டிகிடக்கு

ஆனால் தற்போது ஆக்டிவாக இல்லாத நம்பரில் இருந்து என்ன செய்யமுடியும்
முடிவு உங்கள் கையில்

எனவே எந்த தகவலையும் அதன் உண்மைத் தன்மை தெரியாமல் ஃபார்வேர்ட் செய்ய வேண்டாம்.

பொய்யான செய்திகளை தடுப்பதற்காக எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரங்கள்.


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback