FACT CHECK: ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என பரவும் வதந்தி : யாரும் நம்பவேண்டாம்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழகத்தில் ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இது போன்று தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக செய்தி ஏதும் வெளியிடவில்லை..
மேலும் பள்ளிக்கூடம் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது
கடந்த ஆண்டு பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 6ம் தேதி தான் திறந்தார்கள் அந்த செய்தியினை ஒளிபரப்பிய மீடியாவின் புகைப்ப்டங்களை இந்த ஆண்டு செய்தி போல் பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி