#Breaking News ; கிராமபுறங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் !! தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம்
தமிழகத்தில் ஜூலை 6-ந் தேதி முதல் கிராமப்புற வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.
இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
Tags: தமிழக செய்திகள்