Breaking News

நாளை முதல் ஹோட்டல்கள் திறப்பு : தமிழக அரசு வழிகாட்டுமுறை வெளியீடு

அட்மின் மீடியா
0
 8 ம் தேதி முதல் ஹோட்டல்களை திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு அதற்கான வழிகாட்டு நெறி முறைகளையும் வெளியிட்டுள்ளது

உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டுள்ளது. 

உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்

 உணவகங்களுக்கு வரும் வாடிக்கயைாளர்களுக்கு  நுழைவு வாயிலிலே, கை கழுவ சோப் அல்லது கிருமி நாசினி, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

உணவை தயார் செய்யும் ஊழியர்கள் ஆபரணங்கள் கை கடிகாரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி விட வேண்டும்.

உணவகங்களில், 'ஏசி' பயன்படுத்தக் கூடாது

ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் .

மொத்தம் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களும்உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்களும் கட்டாயம் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசியினால் சுத்தப்படுத்த வேண்டும்

வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் சரிஇல்லாதவர்களை ,பணியில் அமர்த்த கூடாது

பண பரிவர்த்தனையை தவிர்த்து கூடுமான வரையில் செயலி வழி பரிவர்த்தனையை மேற்கொள்ள வேணடும்.

உணவகங்களில் ஏசி பயன்படுத்தகூடாது சன்னல்கள் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு உள்ளது




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback