Breaking News

ஜித்தாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு..!! மசூதிகள் மூடல்..!!

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியா முழுவதும் கொரானா ஊரடங்கு  நடவடிக்கைகள் மக்காவை தவிர்த்து மற்ற பகுதிகளில் சற்று தளர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவின் மற்றுமொரு முக்கிய நகரான ஜித்தாவில் கொரானா பரவலை தடுக்க  தற்போது கட்டுப்பாடுகளை சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை இன்று முதல் நடைமுறைக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாட்கள் வரையிலும் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது




ஜித்தாவில் புதிய விதிமுறைகள்…

ஜித்தாவில் ஊரடங்கு உத்தரவு மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

மசூதிகள்  திறக்க தடை 

அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அனுமதி இல்லை.

உணவகங்களில்  அமர்ந்து உணவு உண்பதற்கு தடை 

ஐந்து நபர்களுக்கு மேல் பொதுவெளியில் செல்ல தடை.

உள்நாட்டு விமானங்களும், ரயில் பயணங்களும் தொடர்ந்து இயங்கும்.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களை தவிர்த்து மக்கள் நகரத்திற்குள் நுழைவதற்கோ வெளியேறுவதற்கோ தடை இல்லை.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback