தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்!
அட்மின் மீடியா
0
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பீலா ராஜேஷை வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமித்துள்ளது தமிழக அரசு.
மேலும் ஜெ.ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது ஜெ.ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்