Breaking News

மரத்தை வெட்டினால் தண்ணீர் கொட்டும் அதிசயம்: வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பது பழைய மொழி 

மரம் வளர்ப்போம் தண்ணீர் பெறுவோம்  என்பது புது மொழி 




ஆம் இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாக மரம் இருக்கின்றது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.

மனித சமுதாயத்துக்கு மரங்கள் கொடுக்கும் பலன்கள் ஏராளம் அந்த வகையில் ஓர் அதிசய மரம் குடிக்க சுவையான தண்ணீரை தருவது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. 


நீங்கள் பார்க்கும் இந்த அதிசய மரத்தின் தாவர பெயர் terminalia tomentosa இந்த வகையை சேர்ந்தது தமிழில் மருத மரத்தின் ஒரு வகையான மட்டி மரம் என்று குறிப்பிடுகின்ரார்கள் இந்த வகை மரங்களை வெட்டினால் தண்ணீர் வரும், இந்த மரங்கள் தன் பெரிய தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. தண்டு பகுதியை லேசாக வெட்டினால் அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது. 

இந்த வீடியோவை வனத்துரை அதிகாரி அப்துல் குயாம் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்:


மரத்தில் தண்ணீர் வரும் வீடியோ பார்க்க:
    

இதற்க்கு முன்னதாகவும் இதே போல் ஒரு வீடியோ வெளிவந்தது குறிப்பிடதக்கது
 


மரம் பற்றிய மேலும் விவரங்களுக்கு:

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback