Breaking News

`பா.ஜ.க-வில் இணையவில்லை நான் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவன் பிரதமர் மோடி பாரட்டிய மோகன் விளக்கம்

அட்மின் மீடியா
0
மதுரை மேலமடைப் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் அவர்கள் அப்பகுதியில் கொரானா  ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பள்ளியில் படித்து வரும் தன் மகளின் எதிர்காலத்துக்காக சேர்த்து வைத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களை கடந்த மாதம் வழங்கினார்.
அவரின் அந்த சேவையை அனைவரும் பாராட்டினார்கள் அந்த செய்தியை நம் பாரத பிரதமர் அவர்களுக்கும் சென்றுள்ளது இந்த நிலையில் நேற்று காலை வானொலியில் மன் கி பாத்தில் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பு மூலம் ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். மதுரையில் சலூன் வைத்திருக்கும் மோகன் என்பவர், மகளின் படிப்பு செலவுக்காக, தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாவை ஊரடங்கால் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்று பேசியிருந்தார்.

நம் பாரத பிரதமர் மோடி அவர்களே பாரட்டிய உடன் அந்த செய்தி  மதுரை முழுவதும் பரவவே சலூன் கடைக்காரர் மோகனை பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மக்கள் பாராட்டினார்கள்.

இந்நிலையில் அவர்கள் குடும்பத்துடன்  பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாகவும் உறுப்பினர் அட்டையை பெறுவதைப்போல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் நான் பா.ஜ.க-வில் இணையவில்லை. நான் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவன். பிரதமர் பாராட்டியதற்காக பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்த வீட்டுக்கு வந்தார்கள். அப்போது சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தார்கள். அதை மரியாதைக்காக வாழ்த்து அட்டைபோல நினைத்து பெற்றுக்கொண்டோம். அவ்வளவுதான். கட்சியில் சேரவில்லை. இதுவரை எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. சலூன் கடை நடத்தும் எனக்கு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர்'' என்றார். என்று நியூஸ் 18 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது

நன்றி: நியூஸ் 18

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback