Breaking News

இன்று இரவு ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் யாரெல்லாம் பார்க்கமுடியும்? முழு விவரம்..

அட்மின் மீடியா
1
 இன்று சந்திரகிரகணம் தோன்றுகிறது.


வானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால் என்ன

சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்த நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. 


இதே போல், சூரியனை நிலவு கடந்து செல்லும் போது, சிறிய அளவில் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்கிறோம்.

ஸ்ட்ராபெரி சந்திரககிரகணம் எப்போது  ஏற்படுகின்றது

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தோன்றியது. இந்நிலையில், தற்போது அதே போன்று இன்று ஜூன் 5ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 

இந்திய நேரப்படி, ஜூன் 5ஆம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்


ஸ்ட்ராபெரி சந்திரககிரகணம் என பெயர் ஏன்

இன்று நிகழப்போகும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில் பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். அதாவது இளஞ்சிவப்பு நிறத்தில் , புற நிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.

எங்கெங்கு தெரியும் யாரால் பார்க்க முடியும்

இந்தியாவில் இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது தெரியாது 

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback

1 Comments