Breaking News

வீடுகளில் தனிமைபடுத்தும் திட்டம் தொடரும்: கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்

அட்மின் மீடியா
0
வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ், காவல்துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் 

கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை இனி அரசின் முகாம்களிலே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக முகாம்களில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 

மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டாலும்,  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து விளக்கமளித்த கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் கொரானா உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்றும்  மேலும் தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும்,அரசின்  விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வீட்டில் இருந்து வெளியே செல்வோரைக் கண்டறிந்து முகாமில் தங்க வைப்போம்" என்று விளக்கம் அளித்தார்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback