Breaking News

அபுதாபியில் உணவகங்கள், மீண்டும் திறப்பதை முன்னிட்டு புதிய வழிமுறைகள் வெளிட்டுள்ள அந்நாட்டு அரசு

அட்மின் மீடியா
0
அபுதாபியில் இருக்கும் ரெஸ்டாரண்ட்கள், கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங்மால்களுக்கு வெளியே இருக்கும் காஃபி ஷாப் போன்றவற்றை மீண்டும் திறப்பதை முன்னிட்டு கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.


கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

  • 12 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்குள் நுழைய அனுமதி 
  • அனைத்து ஊழியர்களும் பணியில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்
  • ஊழியர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள எவருக்கும் கடைகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா தொடர்புடைய அறிகுறிகளைக் கொண்டிருக்கும் எந்தவொரு பணியாளரும் அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • உணவகங்களில் இருக்கும் காத்திருக்கும் பகுதிகள் (waiting area) மூடப்பட வேண்டும்.
  • உணவகங்களில் 40 சதவீத அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பதை உறுதி செய்தல், 
  • தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துதல், 
  • ஒரு மேசைக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர்வதை உறுதி செய்தல் 
  • உணவகங்களில் உள்ள மேஜைகளுக்கு இடையில் 2.5 மீட்டர் தூரத்தை பராமரித்தல் 
  • நுழைவு பகுதிகளில் சானிடைசர்கள் நிறுவப்பட வேண்டும்.

Give Us Your Feedback