Breaking News

தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  அமல்படுத்தபட்ட ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ஜூன் 8 ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறந்து கொள்ள அனுமதி அளித்தது, அதனை தொடர்ந்து பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும் திறக்க உத்தரவு இடப்பட்டுள்ளன . ஆனால் தமிழகத்தில் எந்த வித அறிவிப்பும் அறிவிக்கவில்லை

இந்நிலையில் கடந்த 3 ம் தேதி  தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் தலைமையில் அனைத்து மததலைவர்களுடன் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள் இதனால், நாளை 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தப்படி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் 

தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது

வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை எனவே நாளை வழிபாட்டுதளங்கள் திறக்கப்ப்டுவது சந்தேகமே....


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback