Breaking News

வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் நாளை ஆலோசனை!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் ஆலோசனை!


தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை 03.06.2020 மாலை 4.45 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். 

முன்னதாக .ஜூன் 8ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால்  மாநில அரசுகள் கொரோனா பரவல் நிலைமைக்கு ஏற்ப இந்த விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்து குறிப்பிடதக்கது

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback