Breaking News

ஜூன் 21-ம் தேதி வளைய சூரிய கிரகணம் வெறும் கண்களால் பார்காதீங்க: எச்சரிக்கை செய்தி

அட்மின் மீடியா
0
வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் 21-ம் தேதி நிகழ்கிறது. 




சூரியகிரகணம் என்றால் என்ன?

சூரியனைப் பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சூரியனின் ஒளித்தட்டைச் நிலவு மறைத்துவிடுகிறது. இதனைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். சந்திரன் சூரியனை மறைக்கும் நிலையைப் பொறுத்து அதன் சூரிய கிரகண வகைகள் மாறு படுகின்றன. 

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம், 

சூரியனின் மையப் பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம்.


சூரியகிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?

கண்டிப்பாக சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணாலோ அல்லது தொலைநோக்கி மூலம் நேரடியாகவோ பார்க்ககூடாது.


சூரியகிரகணத்தை எப்படி பார்ப்பது


தொலைநோக்கி அல்லது பைனாகுலரின் வழியே வெளிவரும் சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச்செய்து பார்க்கலாம் 

அல்லது சூரிய கண்ணாடிகளை (சன் கிளாஸ்) பயன்படுத்தி பார்க்கலாம்


சூரிய கிரகணத்தை பார்க்க எளிதான முறை

ஒரு அட்டையில் சிறு துளையை ஏற்படுத்தி தரையிலோ அல்லது வெள்ளை காகிதத்தின் சற்று மேலோ பிடித்தால் சூரிய கிரகண நிகழ்வு அப்படியே அதில் தெரியும்.  சூரியன் ஒளியின் ஆதாரமாக இருப்பதால் பூமியில் ஏற்படும் நிழல்கள் அனைத்தும் சூரிய கிரகணத்தை அப்படியே பிரதிபலிக்கும்.


சூரியகிரகணம் எங்கு தெரியும்

வரும் 21-ம் தேதி நிகழும் வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியாணா, உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மட்டுமே முழுமையாக தெரியும். 

தமிழகத்தில் வளைய சூரியகிரகணத்தின்போது சிறு பகுதியைப் பார்க்கலாம்.


சூரியகிரகணம் தமிழகத்தில் எப்போது தெரியும்

சென்னையில் காலை 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும்.எக்காரணம் கொண்டும் சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் பார்க்கவே கூடாது. 


Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback