காலாவதியான விசிட் விசாவில் அமீரகத்தில் தங்கியிருப்போர் வரும் ஆகஸ்ட் 18-க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: அமீரகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வசிப்பவர்களில் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான மற்றும் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களை கொண்டிருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு அமீரக அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த பொது மன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் செலுத்த வேண்டிய ஓவர்ஸ்டே அபராதமும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 18 வரை இந்த பொது மன்னிப்பு திட்டம் அமலில் இருக்கும்
மேலும் மார்ச் 1-க்கு பிறகு விசா காலாவதியாகி இருந்தால், அவர்களின் விசா காலம் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மேலும் விசா விதிகளை மீறியவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், புதிய விசாக்களுடன் அவர்கள் மீண்டும் அமீரகத்திற்க்கு மீண்டும் வரலாம்
துபாய் விமான நிலையம் வழியாக வெளியேறும் பொது மன்னிப்பு கோருவோர் விமான நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் டெர்மினல்களில் குடியேற்றத் துறையை பார்வையிட வேண்டும்
அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களிலிருந்து புறப்படுபவர்களுள் விமான நேரத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும் என்றும் கூறினார்.
பொது மன்னிப்பு திட்டம் தொடர்பான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் 800 453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
என்று அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சயீத் ரகன் அல் ரஷிடி தெரிவித்தார்.
source:
Tags: வெளிநாட்டு செய்திகள்