மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 16,17 ம்தேதி ஆலோசனை
அட்மின் மீடியா
0
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் வரும் 16 மற்றும் 17 ம் தேதிகளில் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தற்போது 5 ம் கட்ட ஊரடங்கு இந்த மாதம் 30 ம் தேதி வரையில் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் UNlock 1 என சில தளர்வுகளுடன் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு உள்ளனர்.
இந்நிலையில் வரும் 16 மற்றும் 17 ம் தேதிகளில் பிரதமர்மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள்