சர்வதேச விமானச் சேவைகள் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து !
அட்மின் மீடியா
0
இந்தியாவிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டு விமானச் சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் சரக்கு விமான போக்குவரத்திற்கும், சிறப்பு விமான போக்குவரத்திற்கும் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்