10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பது ஆகியவை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
Tags: தமிழக செய்திகள்