துபாயில் இன்று முதல் மால்கள், தனியார் நிறுவனங்கள் 100 % ஊழியர்கள் கொண்டு செயல்பட அனுமதி, மற்றும் வழிகாட்டு நெறிமுறை
அட்மின் மீடியா
0
துபாயில் உள்ள நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழுவானது இன்று 03.06.2020 முதல் துபாயில் உள்ள மால்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களின் எண்ணிக்கையில் செயல்படலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நேரங்களில் பொதுமக்களுக்கு இயக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
ஷாப்பிங் மால்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்
- ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்
- ஊழியர்கள் முக கவசம் கண்டிப்பாக அணியவேண்டும்
- மேலும் கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கும் நபர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட அறை வழங்க வேண்டும்
- கேண்டின் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் கட்டுப்படுத்தல்
- சுவாச நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்த படியே பணியாற்றவேண்டும்
ஷாப்பிங் மால்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்
- வணிக வளாகங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிபாக முக கவசங்கள் அணிய வேண்டும்
- அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்தை பின்பற்றவேண்டும்
- ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் முறையாகக் கடைபிடித்தல்
- மால்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் அடிக்கடி சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்
- ஷாப்பிங் மால்களின் அனைத்து இடங்களிலும் சானிடைசர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- நுழைவாயில்களில் பொது மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை (thermal screening) செய்ய வேண்டும்
மேற்கூறிய வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்