தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வரும் 22ம் தேதி முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வரும் 22ம் தேதி முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த மார்ச் மாதம் முத; நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்துவந்தன. ஆனால் ஆன்லைனில் முக்கிய வழக்குகளின் விசாரணை நடைபெற்று வந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது முதற்கட்டமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நீதிமன்றங்களை வரும் 22ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி கோவை, மதுரை, தஞ்சை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்கள் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட விதிகளோடு செயல்பட உள்ளது
Tags: தமிழக செய்திகள்