Breaking News

FACT CHECK: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி பற்றிய பொய் செய்தியின் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர் மோடியை வரவேற்கும் போது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம் வைக்கவில்லை மரியாதை கொடுக்கவில்லை வீடியோவை பாருங்கள் உண்மை புரியும் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?




சிற்ப்பு விமானத்தில் சென்ற பாரத பிரதமர் மோடி அவர்களை முதலில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் பிரதமரை வணக்கம் கூறி  வரவேற்றார் அதற்க்கு பாரத பிரமரும் அவரது மரியாதையை ஏற்று வணக்கம் கூறினார் அதன்பின்பு பிரதமர் மோடியும் , மேற்க்கு வங்க பிரதமர் இருவரும் பரஸ்பர வணக்கம் கூறி கொண்டார்கள் 

பிரதமர் வணக்கம் வைத்த போதும் மம்தா பானர்ஜி வணக்கம் தெரிவித்து உள்ளார் மேலும் மம்தா பானர்ஜி வணக்கம் தெரிவித்த போது பிரதமரும் வணக்கம் வைத்து உள்ளார்கள் 


ஆனால் சில நல்லவர்கள் அந்த அசல் வீடியோவில் பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை வணங்கி விட்டு நகர்ந்து செல்லும் வீடியோ காட்சியினை எடிட் செய்து கட் செய்து மோடிக்கு மம்தா பானர்ஜி மரியாதையே அளிக்கவில்லை என தவறாக பரப்பி வருகிறார்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback