Breaking News

தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் எது? உங்க ஏரியா எந்த மண்டலம்?

அட்மின் மீடியா
1
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. 




பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

சிவப்பு நிற மண்டலங்கள்: 

1. சென்னை 2. மதுரை 3. நாமக்கல் 4. தஞ்சாவூர் 5. செங்கல்பட்டு 6. திருவள்ளூர் 7. திருப்பூர் 8. ராணிப்பேட்டை 9. விருதுநகர் 10. திருவாரூர் 11. வேலூர் 12.காஞ்சிபுரம்

ஆரஞ்சு நிற மண்டலங்கள்: 1

. தேனி 2. தென்காசி 3. நாகப்பட்டினம் 4. திண்டுக்கல் 5. விழுப்புரம் 6. கோவை 7. கடலூர் 8. சேலம் 9. கரூர் 10.தூத்துக்குடி 11. திருச்சிராப்பள்ளி 12. திருப்பத்தூர் 13. கன்னியாகுமரி 14. திருவண்ணாமலை 15. ராமநாதபுரம் 16. திருநெல்வேலி 17. நீலகிரி 18. சிவகங்கை 19. பெரம்பலூர் 20. கள்ளக்குறிச்சி 21. அரியலூர் 22. ஈரோடு 23. புதுக்கோட்டை 24. தருமபுரி

பச்சை நிற மண்டலங்கள்: 

1. கிருஷ்ணகிரி


மேலும் விவரங்கலுக்கு :https://stopcorona.tn.gov.in/

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. ஒரு கோப்பை தேநீரால் பரவிய கரோனா: கடும் தேடலுக்குப் பின் கண்டுபிடித்த காவல்துறை..

    ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 45 வயது கேபிள் ஆபரேட்டர் ஒருவர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார். அவருக்கு கரோனா தொற்று எப்படி பரவியது என்பதை காவல்துறை கடும் முயற்சி மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளது.

    கேபிள் ஆபரேட்டருக்கு ஏற்கனவே காசநோய் இருந்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி அவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஏப்ரல் 10ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

    இந்த கேபிள் டிவி ஆபரேட்டருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரைச் சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. இதில் 7வது நபர் மார்ச் 20ம் தேதி தனது பெற்றோரைப் பார்க்க நரசரோபேட் என்ற ஊருக்கு சென்றுள்ளார். வழியில், பேருந்து நிலையத்தில் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். அதே சமயம், கேபிள் ஆபரேட்டரும் அதே தேநீர் கடைக்கு வந்து ஒரு தேநீர் குடித்துள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் அந்த கடையில் நின்று தேநீர் குடித்துள்ளனர். அப்போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.

    தில்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களின் செல்லிடப்பேசி எண்களை அடிப்படையாக வைத்து அவர்கள் எந்த பகுதிகளுக்கு எல்லாம் சென்றுள்ளனர் என்று கண்டுபிடித்து, அந்த சமயத்தில் வேறு கரோனா நோயாளிகள் யார் யார் இருந்துள்ளனர் என்பதை கண்டறியும் போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா தொற்றியது பற்றி காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.

    பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த 7வது நபரிடம் விசாரித்ததில், அவர் அந்த பேருந்து நிலையத்தில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் அருந்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

    அந்த கேபிள் ஆபரேட்டர் மூலமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கும், நண்பர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாக 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேபிள் ஆபரேட்டரின் நண்பர் மூலம் 5 மருத்துவர்கள் உட்பட 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    குறிப்பு;அறிமுகம் இல்லாத இருவர் ஒரிடத்தில் ஒரு டீ சாப்பிட எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்..?அதற்குள் இப்படி என்றால்..?உண்மையிலேயே நாம் இதன் சீரியஸ் தெரியாமல்தான் இருக்கின்றோமோ.?

    கீழே புகைப்படம்,ஏப்ரல் 25-ம் தேதி சென்னை கோயம்பேட்டில் கூடிய நம் மக்கள் 50 ஆயிரம் பேர்

    *இது உண்மையான‌‌ செய்தியா‌ என்பதை அட்மின் மீடியா தெரிவிக்கவும்

    ReplyDelete