நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மே 17ம் தேதிவரை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அவை, நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்கவும் பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு