Breaking News

தமிழக போக்குவரத்துக்கு அனுமதி வழிமுறைகள் என்ன என்ன : போக்குவரத்து துறை விளக்கம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒருசில நிபந்தனைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.




மேலும் போக்குவரத்து எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்


மண்டலம் 2 : தருமபுரி, வேலுhர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி


மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி 


மண்டலம்4 நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை


மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்


மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி


மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு


மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிமண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுமாவட்டங்கள் மற்றும்

என இந்த 8 மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்றும், ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,

மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து துறை தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது

பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்கள் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை அணிந்திருக்க வேண்டும்.

அனைத்து பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பேருந்துகளில் கிருமிநாசினி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குளிர்சாதனப் பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்.

பயணிகள் அனைவரும் பின் படிகட்டுகள் வழியாக மட்டுமே ஏற அனுமதி.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback