நாடு முழுவதும் நாளை முதல் விமான சேவை; தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அட்மின் மீடியா
0
நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விதிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் வரும் பயணிகள் தங்கள் விவரங்களை TNePass தளத்தில் பதிவு செய்ய வேண்டும். எல்லோரும் இந்த தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். விமானத்தின் மூலம் தமிழகம் வருபவர்கள் கண்டிப்பாக ஆன்லைன் பாஸ் பெற வேண்டும்.
காய்ச்சல். இருமல், சுவாசப் பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனம் அல்லது சொந்த வாகனம் மூலம் இவர்கள் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லலாம்.
உடனடியாக இ பாஸ் விண்ணப்பிக்க விமான நிலையத்தில் டெஸ்க் அமைக்கப்பட்டு உள்ளது .
கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்.
அறிகுறி உள்ள நபர்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள். என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்
முழு விவரங்களுக்கு
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி