Breaking News

விமான பயனம் மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான நடைமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து வரும் 25-ஆம் தேதி முதல் துவங்கும் உள்நாட்டு விமான போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கான  புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாகவே பயணிகள் விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அதேபோல், 14-வயதிற்குட்பட்ட சிறுவர்களைத் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் செயலில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் மேலும் பயனிகள் விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் விமான நிலையம் வரும்போது கண்டிப்பாக, மாஸ்க், கையுறை  அணிய வேண்டும்.

டிக்கெட்களை கையில் வாங்காமல் மிஷின் மூலம் ஸ்கேன் செய்யப்படும் அல்லது மொபைல் போனில் டிக்கெட்டை காட்டினால் இயந்திரம் மூலம் போர்டிங் பாஸ் வழங்கப்படும். உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது  மேலும் தகவல்களுக்கு


Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback