Breaking News

திருப்பூரில் வந்த பயங்கர சத்தம் என்ன? ஆட்சியர் விளக்கம்

அட்மின் மீடியா
0
திருப்பூரில் காலையில் எழுந்த சப்தம் தேஜஸ் விமானத்தின் சோனிக் பூம் சப்தம் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.




திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சப்தம் ஒன்று கேட்டது இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

இந்த சப்தம் ஏதனால் ஏற்பட்டது இது நிலநடுக்கமா என தெரியாமல் மக்கள் குழம்பினர் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்கள்  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று காலை திருப்பூர் அருகே எழுந்த சப்தம் சூப்பர் சோனிக் தேஜஸ் விமானம் பயணித்ததால் ஏற்பட்டது. மக்கள் யாரும் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம். வதந்தியை பரப்பவும் வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு இதே போல் பெங்களூரிலும் நடந்தது குறிப்பிடதக்கது


Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback