Breaking News

நாளை பஜர் முதல் சவுதியில் பள்ளிவாசல்கள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் கொரானா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணக்க வழிபாட்டுத்தலங்கள் மீதான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, புனித நகரான மக்காவில் உள்ள மசூதிகளை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை மே 31 பஜர் தொழுகை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது



இதனால் அனைத்து மசூதிகளில் பராமரிப்பு, சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு பணிகளை சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகமும் மற்றும் அதன் ஊழியர்களும் முமுரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தொழுகைகு வருபவர்கள் , தொழுகைக்கு முன்பு செய்யப்படும் உடல் சுத்தத்தை வீட்டிலேயே செய்யவேண்டும்


பள்ளிவாசலில் இருந்து வீட்டிற்க்கு சென்றவுடன் தங்களின் கைகளை நன்றாக கழுவுவேண்டும்

முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் தொழுகைகளை வீட்டிலேயே செய்ய வேண்டும்

மசூதிகளில் தொழுகைக்கு வரும் வழிபட்டாளர்கள் தங்களின் தனிப்பட்ட பாயைக் (mat) கொண்டு வருவதும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. 

மேலும் பிரார்த்தனையின் போது ஒருவருக்கொருவர் இடையில் இரண்டு மீட்டர் இடைவெளியை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் மசூதிகளுக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. 

மேலும் அனைவரும் முக கவசம் அணியவேண்டும்

என பல விதிமுறைகளை வகுத்துள்ளது

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback