10 ம் வகுப்பு தேர்வு எழுத வீடு தேடி பஸ் வரும்! - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
10ம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 1 ம்தேதி துவங்கும் என தமிழக அரசு அறிவித்தது
இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து, திரும்ப வீட்டிற்குக் கொண்டு சென்று விட பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது மேலும் மலைப் பகுதியில் உள்ள மாணவர்களை அழைத்துவரவும் பஸ் வசதி செய்யப்படும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவத்துறை அறிவுரைப்படி இடைவெளிவிட்டு அமர வைக்கப்படுவார்கள்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இதனால், நோய்த் தொற்று ஏற்படும் என்று பயப்பட வேண்டாம்என்றார்.
Tags: முக்கிய செய்தி