Breaking News

சமூக விலகலை கடைபிடிப்பதின் அவசியம் என்ன

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி மருத்துவர்கள் வரை  சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். 



அதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்களை வீட்டிலேயே இருங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது

ஆனால் அந்த நேரத்திலும் பலர் சமூக விதிகளை பின்பற்றாமல் இருப்பது பலருக்கு கஷ்டத்தை கொடுக்கிறது  பெரும்பாலானோர் இதை கடைபிடிக்கும்நிலையில், பலர் டூவீலர்களில் தங்கள் இஷ்டம்போல் தெருக்களில் சுற்றுகின்றனர். போலீசார் வழக்குகள் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தும் இவர்களை கட்டுபடுத்தமுடியாதநிலை உள்ளது நம் பாதுகாப்பிற்காக சொல்வதை நாம் கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்பதுகூட தெரியாமல் , கொரானாவின் ஆபத்து புரியாமல் விளையாட்டாக செய்கின்றார்கள்

பலகடைகளில் கூட்டம் அதிகமாக அலைமோதுவதும் கடை உரிமையாளர்கள் அதை கண்டும் காணாமல் இருப்பதும் பொதுமக்களும் அதை கண்டு கொள்ளாமல் சமுக விலகளை கடைப்பிடிக்காமல் இருப்பதும் பரவலாக காணப்படுகிறது 

அன்பு சொந்தங்களே நாம் இங்கே நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்

அரசாங்கம் இப்பொழுது சில விதிமுறைகளை விதிப்பது நம்முடைய நன்மைக்கு தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

ஆகையால் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றாலும் சமூக விலகளை கடைப்பிடிப்போம்

மேலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க போகும் போது தனியாக செல்ல வேண்டும் உங்களுடன்  பிள்ளைகளை அழைத்து செல்ல வேண்டாம்

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போது அவசியமின்றி மக்கள் நடமாடுவது நோய் பரவும் சூழலை அதிகரிக்கும். இதை தவிர்க்க நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பும், நம்முடைய கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து சமூக விலகலை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகிறது.

உயிரை பணயம் வைத்து உலகின் மருத்துவத்துறை சார்ந்தோரரும் காவல்துறையை சார்ந்தோறும்  இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

உங்களில் யார் ஒருவர் இந்த விலகலை கடைபிடிக்காமல் இருக்கின்றீர்களோ பிரச்சனை உங்கலுக்கு மட்டும் இல்லை, உங்கல் குடும்பத்தினருக்கும்தான் என்பதை நினைவுபடுத்துகின்றோம்

இந்த சூழலில் சமூக விலகலை கடைபிடிக்கவும் வீடுகளில் தனித்திருக்கவும் அதை நாம் ஒவ்வொருவரும் கடைபிடிப்பது மிகவும் அவசியம். தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்கவேண்டும். தினமும் காய்கறி வாங்க செல்வதை விட வாரம் ஒருமுறை வாங்கி வைத்து கொள்வோம். 

ஆகவே பொறுப்பாக இருப்போம், முக்கியமாக வீட்டினுள் இருப்போம் ஆரோக்கியமாக இருப்போம்.தனிமையை கடைபிடித்து நோயின்றி வாழ்வோம். மேலும் 

சமுகவிலகலை கடைப்பிடிப்போம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவோம் என அட்மின் மீடியா தங்களை அன்போடு கேட்டுகொள்கின்றது





Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback