நோன்பு தொழுகை.. பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுங்கள்.. சவுதி அரசாங்கம் அறிவிப்பு..
அட்மின் மீடியா
0
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமான கடமைகளில ஒன்று வருடத்தில் ஒரு முறை ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு வைத்து இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் தராவிஹ் தொழுகையை நிறைவேற்றுவதும் ஆகும்.
நோன்பு முடிந்து அனைவருமாக சேர்ந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனோ எனும் தொற்று நோய் வேகமாக பரவி வருவதாலும், அதை தடுக்கும் நோக்கில் நோன்பு நேர இரவுத் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகை ஆகியவை வீட்டிலேயே தொழு வேண்டும் என சவுதி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மதகுரு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லா பின் முஹம்மது அப்துல்லா அறிவிப்பு செய்துள்ளார்.
source:
https://www.arabnews.com/node/1660406/saudi-arabia
https://www.arabnews.com/node/1662336/saudi-arabia
https://www.arabnews.com/node/1662336/saudi-arabia
Tags: மார்க்க செய்தி