Breaking News

கொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த  உலக நாடுகள் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவும் என்ற அச்சம் தற்போது மக்களிடம் எழுந்துள்ளது


உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி மக்களும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். ஏனெனில் இது ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு எளிதாக பரவும். எனவே மக்கள் எப்பொழுதும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. அடிக்கடி கை கழுவுவது, நம் வீட்டை சுத்தமாக வைப்பது போன்றவை COVID-19 வராமல் தடுக்க உதவுகிறது.


மேலும் இறந்தவர் உடலில் இருந்து கொரானா வைரஸ் பரவாது என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது

நம் தமிழ் நாட்டில் கொரானாவால் பாதிப்புக்குள்ளாகி இறந்தவரின் இறுதி சடங்கு எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பு உபகரணங்களுடன் குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்ட குடும்ப அங்கத்தினர்களுடன்  எவ்வாறு நடைபெற்று வருகின்றது என்பதை பார்த்திருப்பீர்கள்.


உலக வரலாற்றிலேயே இது ஒரு புதிய நோயாக கண்டறியப்பட்டு இருப்பதால், சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கொரானா தொற்றுள்ள உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து பல வதந்திகளும் தவறான தகவல்களும் சமூக ஊடக தளங்களில் பரவி வருகின்றன. 

இதைத் தடுக்க, இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது நாட்டு மக்களுக்காக பின்வரும்  வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும்விவரங்களுக்கு: https://www.mohfw.gov.in/pdf/1584423700568_COVID19GuidelinesonDeadbodymanagement.pdf

அந்த வழிகாட்டுதலில் கொரோனாவால் இறந்த உடல்களை  மருத்துவ பணியாளர்களும், இறந்தவரின் குடும்பத்தினரும் எவ்வாறு தங்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் கையாள்வது என்பதை தெளிவாக சொல்லிருக்கிறது.

அதுமட்டுமல்லாது கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை எவ்வாறு கொரோனா  வார்டில் இருந்து பிணவறைக்கு கொண்டு செல்வது, பிணவறையில் எவ்வாறு இறந்த உடலை பராமரிப்பது, பிரேதத்தை எவ்வாறு அமரர் ஊர்தியில் ஏற்றி அனுப்புவது, அடக்கம் செய்யும் போது என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.

மேலும் அடக்கம் செய்யும் இடுகாடுகளில் கடைபிடிக்க வேண்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கும் எட்டு கட்டளைகள் உங்கள் பார்வைக்கு : 


  • சரியான முறையில் மூடிபிரத்யேக பிளாஸ்டிக் பையில் உரையிடப்பட்ட இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் நபர்கள், சுகாதார ஊழியர்கள் தங்களுக்கு கூடுதல் ஆபத்து இல்லை என்பதை உணர வேண்டும்

  • இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் நபர்கள் உரிய முகக்கவசம், கையுறை உள்ளட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் மிகக் கவனமுடன் இருப்பதோடு கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • பிரத்யேக பிளாஸ்டிக் பையில் மூடப்பட்டுள்ள பிரேதத்தினை குடும்பத்தினர் கடைசியாக ஒரு முறை மட்டும் முகத்தை மட்டும் தூரத்தில் நின்று திறந்து பார்க்க அனுமதிக்கப்படலாம்.

  • பிரேதத்தின் அருகாமையில் தகுந்த இடைவெளி விட்டு நின்று, பிரேதத்தை தொடாமல், அவரவர் மத சம்பிரதாயங்களின் பிரகாரம் வேத வசனங்களை ஓதவோ, தொழுகை நடத்தவோ செய்யலாம்.

  • பிரேதத்தை குளிப்பாட்டவோ, முத்தம் கொடுக்கவோ அல்லது கட்டி அணைக்கவோ கூடாது.

  • அடக்கம் செய்து முடித்த பின்னர் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

  • பிரேதம் எரியூட்டப்பட்டிருப்பின் அதன் சாம்பலை எடுத்து மத சம்பிரதாயங்களை செய்யலாம்.

  • அடக்கம் செய்யும் இடத்தில் கும்பலாக நிற்காமல் சமூக இடைவெளி விட்டு நிற்பது நல்லது.

மேலும் தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கொரோனா பரவும். இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா பரவாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

மேலும் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கை படியுங்கள்
https://apps.who.int/iris/bitstream/handle/10665/331538/WHO-COVID-19-lPC_DBMgmt-2020.1-eng.pdf



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback