Breaking News

கொரானாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன? சுகாதாரதுறை வெளியீடு

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது எப்படி என  வழிமுறைகளை, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


அதன்படி 


மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இறுதி நிகழ்வில் அனுமதிக்கபடுவார்கள் அவர்களும் கையுறை, முககவசம், கட்டாயம் அணிந்து இருக்கவேண்டும், மேலும் சமூக இடைவெளி அவசியம் ஆகும்

இறந்தவர் உடலை அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்றி கொள்ளவேண்டும். மேலும்  அந்த பிளாஸ்டிக் பை மீது சோடியம் ஹைப்போ குளோரைடு  தெளிக்க வேண்டும். 

இறந்தவர்களின் உடலை கையாளுபவர்கள் முகக்கவசம், மற்றும் கையுறை கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.

இறந்தவர் உடலை தகனம் அல்லது  அடக்கம் செய்யும் இடத்தில் ஒப்படைத்த பின், உடலை கொண்டு சென்ற வாகனத்தையும் சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இறந்தவர் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால், பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்டலாம். 

பணியாளரை தவிர வேறு யாரும் இறந்தவர் உடலை தொட கட்டாயம் அனுமதிக்க கூடாது.

இறந்தவரின் உடலை தொடாமல் மத சம்பந்தமான சடங்குகளை செய்ய அனுமதிக்கலாம்.

இறந்தவரின் உடலை குளிப்பாட்டுதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றை செய்ய அனுமதி இல்லை. 


அடக்கம் முடிந்ததும் அந்த இடத்தில் இருந்த பணியாளர்கள், இறந்தவரின் உறவினர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் 

இறந்தவரை தகனம் செய்தபின் வரும் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்த ஆபத்தும் இல்லை. 

கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தகனம் அல்லது  அடக்கம் நடக்கும் இடத்தில் மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவர்களும் சமூக இடைவெளி உள்பட பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவேண்டும்


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback