Breaking News

ஜூம் ஆப் பயன்படுத்துபவர்களே எச்சரிக்கை:

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் உள்ள நிலையில் ஜூம்  ஆப் பயன்பாடு அதிகரித்துள்ளது



இந்த ஜூம் ஆப்பில் எத்தனை பேர் வேண்டுமானாலும் வீடியோவாக கால் போல் பேசலாம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த ஆப்பில் ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்துகின்றார்கள், மேலும் சமையல் கற்று கொடுக்கின்றார்கள், குழு விளையாட்டு , அலுவலக மீட்டிங் வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுக்கு  ஜூம் ஆப் பயன்பாட்டை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். 


ஆனால் இந்த ஜூம் பயன்பாடு தனிப்பட்ட தகவல்களைக் கசியவிடுவதாகவும், மக்களை உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக உண்மையில் ஜூம் பயன்பாட்டில் எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. 

மேலும்  கூகிள் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கும் ஜூம் பயன்பாட்டைத் தடை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் 'ஜூம்' செயலி,

ஜூம் பயன்பாட்டில் கூறப்படும் தனிநபர் பாதுகாப்பு குறைபாடுகளை விரைவில் சரி செய்வோம் என்று தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் தெரிவித்துள்ளார். தனி பயனரின் தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி, அதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் விரைவில் செய்து முடிக்கும் என்று கூறியுள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback