Breaking News

ஒடிபி திருடர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் : கண்டிப்பாக படிக்கவும்

அட்மின் மீடியா
0
வங்கியில் இருந்து பேசுகின்றோம் என கூறி இஎம்ஐ சலுகை பெற்றுத் தருவதாக கூறி யாரேனும் தொடர்பு கொண்டால், அவர்களிடம் வங்கி கணக்கு, டெபிட் கார்டு, ஒடிபி  ஆகியவற்றை கொடுத்து ஏமாற வேண்டாம் என வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 



கொரோனாவால் கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. 


இந்த அறிவிப்பை பயன்படுத்தி வங்கியில் இருந்து பேசுவது போல் சில மோசடியாளர்கள்  உங்கள் EMI  மூன்று மாதத்திற்க்கு ரத்து செய்ய உங்கள் வங்கிவிவரங்கள், டெபிட் கார்டு எண், பின் நம்பர், மற்றும் ஒடிபி விவரங்களை கேட்பார்கள் நீங்கலும் நம்பி கொடுத்தால் உங்கள் கணக்கில் உள்ள பணம் அம்போதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

இப்படிப்பட்ட மோசடியாளர்களிடம் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு போதும் அவர்களிடம் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள்,  டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு பின் நம்பர்,மற்றும் ஒடிபி ஆகியவற்றை அளிக்கவேண்டாம் என அட்மின் மீடியா சார்பாக கேட்டு கொள்கின்றோம்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback