Breaking News

ஒடிசா, பஞ்சாப்,மஹாராஷ்டிரா, தெலுங்கானா, மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா  வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி  வரை 21 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முடிவடைய இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது




ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.




மகாராஷ்டிராவும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இன்று அறிவித்துள்ளார்.



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback