ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எவையெல்லாம் இயங்கலாம்.? எதற்கெல்லாம் தடை.? - மத்திய அரசு விளக்கம்..
அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20ம் தேதி முதல் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது
- மே 3ம் தேதி வரை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாது
- அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி
- நியாய விலைக்கடைகள் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி
- மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
- உணவு, மருந்துகளை இணைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை
- மீன் இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு.
- 50% சதவீத ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது மத்திய அமைச்சகம்
- பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவு
- ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்
- எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி
- 100 நாள் வேலைத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.
- அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.
- தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை
- பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்
- விமானம், ரயில், சாலை போக்குவரத்து ஒட்டு மொத்தமாக மே 3 ம் தேதி வர நிறுத்தப்படும்
- மாநிலங்களுக்கிடையேயும் மாவட்டங்களுக்கும் இடையேவும் போக்குவரத்து கிடையாது.
- சினிமா அரங்குகள், மால்கள், ஷாப்பிங், விளையாட்டு வளாகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பார்கள் போன்றவை மே 3 வரை மூடப்பட வேண்டும்
- கட்டுமானப்பணிகள் நடைபெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
- மத நிகழ்வுகள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்படும்.
- வங்கிகள், ஏ.டி.எம்கள், காப்பீட்டுத் துறைகள் இயங்கும் .
- கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்
- ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம்
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!
விதிவிலக்கு அளித்த தொழில் நிறுவனங்களை தவிர மற்றவைகள் இயங்க அனுமதியில்லை என மத்திய அரசு அறிவித்துள்லது
Tags: முக்கிய அறிவிப்பு