FACT CHECK :மே 20 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என சமூக வலைதளங்கலில் பரவும் பொய் செய்தி
அட்மின் மீடியா
0
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
கொரோனாவால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், முதல்வர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு முடிந்ததும் 10 ம் வகுப்பு பொது தேர்வு குறித்து அட்டவனை வெளியிடப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிலையில், மே 20 ஆம் தேதி முதல் 10-வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தேர்வு அட்டவணை வெளியானதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் பொய்யானது யாரும் நம்பவேண்டாம் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கவில்லை எனவே சமூகவலைதளங்களிலோ, வேறு இணையதளங்களில் வரும் பொய்யான தகவல்களையோ நம்ப வேண்டாம்
Tags: முக்கிய அறிவிப்பு