அரிசி அட்டைகளுக்கு மட்டுமே ரூபாய் 1000/- மற்றும் இலவச பொருட்கள்; சர்க்கரை அட்டைகளுக்கு இலவச பொருட்கள் மட்டும்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பையடுத்து அதற்கான சுற்றிக்கையை உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், அரசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை, ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைகளுக்கு அரிசிதவிர இதர பொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும் போதே ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்.5-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்காது என்பதால் அன்றே வீடுவீடாக சென்று அத்தியாவசிய பொருட்களுக்கான டோக்கன் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் நிவாரணத் தொகையை நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடாது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Tags: முக்கிய செய்தி