CAA போராட்டகாரர்களுக்கு செந்தில்பாலாஜி அவர்கள் பணம் கொடுக்கும் வீடியோ உண்மையா
அட்மின் மீடியா
0
செந்திபாலாஜியும், ஜோதிமணியும் CAA போராட்டத்திற்க்காக பணம் கொடுத்தார்களா? உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் திமுக மாவட்ட செயளாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் மற்றும் பலர் முன்னிலையில் செந்தில் பாலாஜி அவர்கள் நீல கலர் சட்டை அணிந்துள்ள ஒருவருக்கு ஒரு கவர் கொடுக்கின்றார் அதனை குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக போராடுங்கள் என்று பணம் கொடுக்கின்றார் என ஒரு பொய்யான தலைப்பு இட்டு பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
இல்லை அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
பள்ளபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் தோட்டம் அபுதாஹீர் அவர்களின் மகளுக்கு கடந்த 06.02.2020 அன்று திருமணம் நடந்தது
அந்த திருமணத்திற்க்கு அவர் பல முக்கிய பிரமுகர்களை அழைத்துள்ளார் .அந்த திருமண நிகழ்வில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் திரு செந்தில் பாலாஜி அவர்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி .ஜோதிமணி அவர்களும் கலந்துகொள்ள முடியவில்லை ஆகையால் பள்ளபட்டிக்கு ஒரு கூட்டத்திற்க்கு வந்து கலந்து கொண்ட பின்பு அப்படியே மணமக்களை வாழ்த்த அவரது வீட்டிற்க்கு வருகை தந்து மணமகனிடம் மொய் கொடுத்ததை யாரோ தவறாக வதந்தி பரப்புகின்ரார்கள்.
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி