அல்லாஹ்வை புகழ்ந்த மோடி எங்கு நடந்தது எப்போது நடந்தது ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நம்மை அழிக்க நினைப்பவர் பாரதப் பிரதமர் அவர்கள் இன்றைய சூழலில் அல்குர்ஆனையும் அல்லாஹ்வையும் தாங்கள் நாவினால் பேச வைத்தான் ஆண்டவன் எல்லா புகழும் இறைவனுக்கே என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பழையது
தற்போது நடந்தது என யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 2015 ம் ஆண்டு நடந்தது
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் குஜராத்தில் ராஜ்காட் நகரில் நடைபெற்றது
பிரதமர் மோடி அவர்கள் Education of Muslims என்ற புத்தக வெளியிட்டு விழாவில் பேசியது தான் அந்த வீடியோ
வைரலாகப் போகும் பகுதி 8.53 நிமிடங்களிலிருந்து நீண்ட வீடியோவிலிருந்து வெட்டப்பட்டது.
அந்த விழாவில் கல்வி பற்றி பேசும்பொழுது அனைத்து மதங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அதில் கூறியிருப்பார் அந்த வரிசையில் (இல்மு) கல்வி என்ற வார்த்தை குர்ஆனில் 800 தடவைகள் வருகிறது என்று கூறியுள்ளார். இதை சிலர் தற்போது குழப்பம் விளைவிக்க இவ்வாறான பதிவுகளை போட்டு பரப்பி வருகிறார்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்
அந்த வீடியோவின் முழு தொகுப்பில் 8 வது நிமிடம் 53 வது விநாடியில் அவர் பேசியது வரும் வீடியோ கீழே உள்ளது
https://www.youtube.com/watch?v=FeZTrlHWs34
எனவே யாரும் பழைய செய்தியினை எடுத்து தற்போது நடந்தது போல் பொய்யாக பரப்பாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி