பாண்டிச்சேரி எல்லை மூடல்: வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை:
அட்மின் மீடியா
0
புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை
புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை முதல் வருகின்ற 31 ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
வருகின்ற 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை முதல் வருகின்ற 31 வரை வெளிமாநில வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை
புதுச்சேரியில் மளிகை, காய்கறி போன்ற பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் உரிய பில் காண்பித்தால் அனுமதிக்கப்படும் கொரோனாவின் தீவிரத்தை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு