Breaking News

கொரானா பாதித்த மக்களை நினைத்து இத்தாலி நாட்டு பிரதமர் கண்கலங்கி நின்றாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
2
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இத்தாலி நாட்டின் அரசால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை, தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாக அந்நாட்டின் அதிபர் கண்ணீர் விடும் காட்சி என ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

முதலில் அவர் இத்தாலி நாட்டு அதிபர் இல்லை

பலரும் இத்தாலி நாட்டு அதிபர் என ஷேர்செய்யபடும் புகைபடத்தில் உள்ளவர்
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி போல்சோனாரோ ஆவார். 

அவர் கடந்த 18.12.2019 அன்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில்  2018 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டிபோரா என்ற பகுதியில் அவர் மீது நடந்த  கத்தி குத்து தாக்குதலை நினைவுக்கூர்ந்த போது அழுதுள்ளார்

அந்த செய்தியின் புகைபடத்தை எடுத்து இத்தாலி பிரதமர் அழுதார் என ஒரு கட்டுகதையை  இணையத்தில் பரப்பி வருகின்றார்கள்


இத்தாலி நாட்டின் பிரதமரின் பெயர் GIUSEPPE CONTE அவரது புகைபடம் இது தான்



இத்தாலி நாட்டின் ஜனாதிபதியின்  பெயர் SERGIO MATARELLA அவரது புகைபடம் இது தான்

 

 
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

https://betoportoalegre.com/bolsonaro-chora-ao-lembrar-de-facada-em-culto-evangelico-no-planalto/

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments