Breaking News

டெல்லியில் போராட்டகாரர்களுக்கு பணம் அளிக்கும் வீடியோ என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டெல்லி போராட்ட காரார்களுக்கு பணம் அளிக்கும் காட்சி பாருங்க என்று ஒரு வீடியோ  சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின்மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு பலரும் உதவிகரம் நீட்டி அவர்களது வாழ்வாதரத்திற்க்கு உதவிகரம் நீட்டுகின்றார்கள் அப்போது எடுக்கபட்ட வீடியோவை தவறாக ஷேர் செய்து வருகின்றார்கள்

 இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை  சென்னையைச் சேர்ந்த ஒரு சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் சந்திரமோகன் என்பவர் பார்த்துள்ளார்

அவரும் டெல்லியில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைச் செய்வதற்காக ஐந்து நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு இருப்பவர்களிடம் இந்த வீடியோவை காட்டியதற்க்கு அவர்கள் இடு பாபு நகர் பகுதி என்று கூறினார்கள் .அந்த பகுதிக்கு சென்று உண்மையை விசாரித்து வெளி உலகிற்க்கு காட்டியுள்ளார். அவர் அந்த பகுதியில் உதவி செய்த  ஷாஜாத் மாலிக்என்பவரை கண்டறிந்து அவரிடம் தமிழகத்தில் இது போல் உங்கள் வீடியோ தவறாக பரவுகின்ரது என்று எடுத்துகூறி அவரிடம் அதே பகுதிக்கு அதே உடையில் வரவைத்து வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார் 

மேலும் கார் பாலிஷ் தொழில் செய்யும் ஷாஜாத் மாலிக் இது குறித்து கூறுகையில்   கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு விநியோகிக்க சிறிது மளிகை பொருட்கள் ஏற்பாடு செய்து எடுத்து வந்து இருந்தார் .டெல்லி பாபு நகரில்  கலி எண் 9 என்று அழைக்கப்படும் பகுதியில் கலவரத்தால் பாதிக்கபட்டமக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கி கொண்டு இருந்த போது குழந்தைக்கு பால் வாங்ககூடமுடியாமல் கஷ்டபட்டவர்களுக்கு தலா ரூ .500 பணமாக கொடுத்து உதவி செய்துள்ளார்

இப்போது யாரோ அந்த வீடியோவை படம்பிடித்து தவறான செய்தியுடன் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த வீடியோ பிப்ரவரி 28 அன்று படமாக்கப்பட்டது அதன் அசல் வீடியோ கீழே லின்ங்கில் உள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



சென்னையை சேர்ந்த சந்திர மோகன் சம்பவ இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்து நேரடியாக எடுக்க பட்ட வீடியோ 

அட்மின் மீடியா ஆதாரம் 1

https://m.facebook.com/maverick.crew.581/videos/531083504487654/?locale2=en_US



டெல்லி பாபு நகரில்  கலி எண் 9 என்று அழைக்கப்படும் பகுதியில் கலவரத்தால் பாதிக்கபட்டமக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கும் வீடியோ

அட்மின் மீடியா ஆதாரம் 2

https://vimeo.com/394966915 


டெல்லி பாபு நகரில்  கலி எண் 9 என்று அழைக்கப்படும் பகுதியில் கலவரத்தால் பாதிக்கபட்டமக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கும் வீடியோ

அட்மின் மீடியா ஆதாரம் 3

https://vimeo.com/394967738


அட்மின் மீடியா ஆதாரம்4

 இந்த செய்தி பொய் என்று ஆல்ட் நியூஸ் வெளியிட்ட செய்தி 
https://www.altnews.in/shaheen-bagh-women-getting-paid-no-this-is-a-video-of-relief-distribution-to-delhi-riot-victims/



மேலும் சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளுக்கு உண்மையை சமூகத்திற்க்கு வெளிச்சம் போட்டு காட்டும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en_IN


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

https://chat.whatsapp.com/KuUnPyYq5cVDZcuq3sXbpu

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback