Breaking News

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

10 பொதுத்துறை வங்கிகள் 4 ஆக ஒருங்கிணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. 

சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைகிறது. 

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. 

அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைகிறது.

இந்த இணைப்பு, ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது.

இந்த வங்கிகள் இணைப்பை எதிர்த்து நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback